விருதுகளும் பாராட்டுக்களும்
- 2011.10.06 யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் இவரது சைவப்பணி,தமிழ்ப்பணி, சமூகப்பணிகளை கௌரவித்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மூதவை, பேரவை வழங்கிய சிபார்சின் பேரில் கௌரவ கலாநிதிப் பட்டம் 2011.10.006 பல்கலைக்கழக வேந்தரால் வழங்கப்பட்டது.
- இவரது பெயருடன் நிரந்தரமாகவே சேர்ந்தமைந்த வகையில் ‘செஞ்சொற் செல்வர்” என்ற பட்டம் திகழ்கிறது. இணுவில் – கோண்டாவில்காரைக்கால் சிவன் தேவஸ்தானத்தின் 1992ஆம் ஆண்டு மகோற்சவ காலத்தின் போது ‘சைவ சமய மகிமைகள் பேருண்மைகள்” எனும் பொருள் பற்றிபன்னிரு கோணங்களில் தொடர் விரிவுரை நிகழ்த்தியதற்காக மேற்படி தேவஸ்தானத்தால் 1992 ஆகஸ்ட் 13ஆம் திகதியன்று ‘செஞ்சொற் செல்வர்” பட்டம் வழங்கப்பட்டது.
- திருநெல்வேலி தலங்காவற் பிள்ளையார் கோவில் வருடாந்த மகோற்சவம் 1993 ஆலய உற்சவகாலத்தில் தெய்வீக அருளுரை வழங்கிய கலாநிதி ஆறு திருமுருகன் அவர்களுக்கு தலங்காவற் இளைஞர்களால் ‘திருவருட்சீலன்” எனும் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
- சுன்னாகம் தெற்கு சிவபூதராயர் கோயிலில் 09.09.1994இல் இடம்பெற்ற மகா கும்பாபிசேகத்தை தொடர்ந்து பெரியபுராணம் தெய்வீக அருள் வழங்கிய மேற்படி ஆலய பரிபாலன சபையினரால் ‘அருளுரை வாரிதி” எனும் பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.
- 1999 கொழும்புத்துறை மன்நிலாடு பிள்ளையார் கோயில் நிர்வாக சபையினரால் ‘செஞ்சொற் கொண்டல்” பட்டம் வழங்கப்பட்டது.
- கனடா வாழ் இணுவையூர் மக்கள் சார்பாக 2000 மே மாதம் 20ஆம் திகதியன்று ‘செந்தமிழ் சைவ வித்தகர்” பட்டம் வழங்கப்பட்டது.
- அறநெறி பிரசாரத்தின் மூலமும் செயல் மூலமும் சைவசமய வளர்ச்சிக்கும், சைவப்பண்பாட்டின் மேம்பாட்டிற்கும் பல்லாண்டு காலமாக ஈழத்திருநாட்டிலும் வெளிநாடுகளிலும் ஆற்றி வருகின்ற பணியை பாராட்டும் முகமாக ‘அறநெறிச் செம்மல்” எனும் விருதினை இலண்டன் சிவயோக நிர்வாகம் 29.04.2000 இல் வழங்கி கௌரவித்தது.
- சுழிபுரம் ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான வருடாந்த பொங்கல் விழாவின் போது 2001ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் மேற்படி தேவஸ்தான பரிபாலன சபையால் ‘சைவச்செந்தமிழகன்” எனும் கௌரவ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
- யாழ் தேசிய கல்வியியற் கல்லூரியின் மூன்றாம் ஆண்டு நிறைவு விழாவின் போது 2003 ஜீலை 10ஆம் திகதியன்று கல்லூரியின் சார்பாக, பீடாதிபதி கலாநிதி தி.கமலநாதன் அவர்களால் ‘சிவநெறித் தவமகன்” எனும் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளது.
- இவரது பெருமுயற்சியினாலே தோற்றம் பெற்ற இணுவில் அறிவாலய திறப்பு விழாவின் போது 2005 மார்ச் 20ஆம் திகதியன்று இணுவில் வாழ் மக்கள் சார்பாக ஓய்வு பெற்ற வட மாநில கல்விப் பணிப்பாளர் இரா. சுந்தரலிங்கம் அவர்களால் ‘பணிக்கொடைச் செம்மல்” எனும் கௌரவம் வழங்கப்பட்டது.
- தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் 2008 மே மாதம் 18ஆம் திகதியன்று புதுடில்லியிலுள்ள டில்லி தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்ற அனைத்துலக வளர் தமிழ் ஆய்வு மாநாட்டின் போது ‘செந்தமிழ் ஞாயிறு” விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.
- அகக்ரைபப்ற்று ஆலையடி வேம்பு பிரதேச இந்து மாமன்றத்தால் கலாநிதி ஆறு திருமுருகன் அவர்களின் சமய சமூக சேவையைப் பாராட்டி ‘மனித நேயச் செம்மல்” விருது 09.04.2011 அன்று வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளது.
- சிகரம் தொட்ட செம்மலுக்கு” 14.01.2012 அன்று கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் சான்றோர் அவைதனில் நடைபெற்ற முதுசம் நிகழ்வில்
- இணுவில் திருவூர் ஒன்றியத்தினரும் கற்கம் இலக்கிய சேவை அமைப்பினரும் இணைந்து
“செவ்வியல் ஞாயிறு” எனும் சிறப்பு பட்டத்தினை வழங்கி கௌரவித்தனர். - ‘கல்விக்கு நிழல் கொடுத்த செல்வரே கலாநிதியாம் நம் அதிபர்” என ஸ்கந்தா சமூகம், ஸ்கந்தவரோதயக் கல்லூரியால் 2012ஆம் ஆண்டு கௌரவிக்கப்பட்டார்.
- கம்பன் விழா 2014 இல் கலாநிதி ஆறு திருமுருகன் அவர்களின் ஏற்றமிகு சமூகப்பணியை பாராட்டி ‘மகா வித்துவான் சி.கணேசையர் விருது” 16.02.2014 நடைபெற்ற கம்பன் விழாவில் கொழும்பு கம்பன் கழகப் பெருந்தலைவர் நீதியரசர் மாண்புமிகு ஜெ.விஸ்வநாதன் அவர்களால் வழங்கப்பெற்றது.
- யாழ் மாநகராட்சி மன்ற சைவசமய விவகாரக் குழுவினரால் கலாநிதி ஆறு திருமுருகன் அவர்களின் சமய சமூகப்பணிகளை கௌரவிக்கும் முகமாக ‘யாழ் விருது’ 15.08.2017 வழங்கப்பட்டது.
- சைவத்திற்கும் தமிழிற்கும் இன்னல் உற்றவர்களுக்கும் சேவையாற்றி வரும்
துறவியான கலாநிதி ஆறு திருமுருகன் அவர்களின் சேவையை பாராட்டி ‘சைவத்தமிழ்த் துறவி” எனும் விருதை இணுவையூர் அப்பாக்குட்டி அறக்கட்டளையின் சார்பில் இலண்டன் ஈழபதீஸ்வரர் ஆலயத்தில் 08.11.2017 அன்று வழங்கி கௌரவிக்கப்பட்டது. - நாகை மாவட்டம் சீர்காழி வட்டம் கொள்ளிடம் பெரிய குத்தவக்கரை ஸ்ரீ வீரனார் திருக்கோயில் திருக்குட நன்னீராட்டு பெருவிழாவை முன்னிட்டு கலாநிதி ஆறு திருமுருகன் அவர்கட்கு ‘திருவாசக காவலர்” எனும் விருது 05.07.2018 அன்று வழங்கப்பட்டது.
- 31.12.2018 அன்று டான் தொலைக்காட்சி சேவையால் ‘சாதனை தழிழன்” வழங்கப்பட்டது.
- நாள் தவறா நற்பணிகள், அடுத்தவர் துயர் பொறுக்காமை அருள் நிறைந்த அறக்குணங்கள், தேசபக்தி, செயல்வீரம் இத்தனையும் ஒழுங்கமைந்த கலாநிதி ஆறு திருமுருகன் ஐயா அவர்கட்கு தென்மராட்சி இலக்கிய அணியால் 2019ஆம் ஆண்டு கம்பன் விழாவில் ‘அருட்செல்வர்” எனும் விருது வழங்கப்பட்டது.
- ஈ-குருவி- 2019 ஆண்டுக்கான சாதனையாளர் விருது கனடா ஈ-குருவி குழுவால் அளிக்கப்பட்டது.
- 2018ஆம் ஆண்டு 50 தடவைகளுக்கு மேல் இரத்ததானம் வழங்கியமையால் இரத்த வங்கியால் விருது வழங்கப்பட்டது.
- 1994 உடுவில் தெற்கு ஸ்ரீசித்தி விநாயகர் ஆலய உற்சவத்தின் போது பெரியபுராண விரிவுரைகளை நிகழ்த்தியமையை பாராட்டி ‘கதாமிர்த சுரபி” விருது வழங்கப்பட்டது.
- 1994 சங்கானை மாவடி ஸ்ரீ ஞான வைரவர் ஆலய வருடாந்த உற்சவ காலத்தின் போது பெரியபுராண தெய்வீக சொற்பொழிவாற்றியமை முன்னிட்டு ‘சிவசுரபி” எனும் கௌரவ பட்டம் வழங்கப்பட்டது.
- 1994 ஸ்ரீ நாகவரத நாரயணர் தேவஸ்தானம் மகோற்சவத்தில் தொடர் சொற்பொழிவாற்றியமை முன்னிட்டு ‘செஞ்சொற் சஞ்சீவி” எனும் கௌரவ பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது
- 2002 தொல்புரம் வழக்கம்பரை முத்துமாரியம்மன் தேவஸ்தானம் இராமாயணம் எனும் தலைப்பில் தொடர் சொற்பொழிவாற்றியமைக்காக ‘அருள் ஞான வேந்தன்” எனும் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
- 2000 பிரித்தானிய இணுவை மக்கள் ஐக்கிய ஒன்றியத்தால் ‘இணுவை இளம் நம்ப” எனும்
விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. - 1999 இணுவில் பரராஜசேகரர் தேவஸ்தானத்தில் ‘அருள் ஞானபூபதி” விருது