Dr. Aaruthirumurugan
Skip to content
Dr. Aaruthirumurugan
  • முகப்பு
  • சொற்பொழிவுகள்
    • YouTube videos
  • கலாநிதி ஆறு. திருமுருகன்
    • வகிபாகங்கள்
    • திருப்பணிகள்
    • அறப்பணிகளின்
    • சொற்பொழிவுகள்
    • விருதுகளும் பாராட்டுக்களும்
  • முகப்பு
  • சொற்பொழிவுகள்
    • YouTube videos
  • கலாநிதி ஆறு. திருமுருகன்
    • வகிபாகங்கள்
    • திருப்பணிகள்
    • அறப்பணிகளின்
    • சொற்பொழிவுகள்
    • விருதுகளும் பாராட்டுக்களும்
ஆறுமுகம் - சரஸ்வதி தம்பதியினரினருக்குப் புதல்வனாக 1961 மே மாதம் 28ஆம் திகதி வைகாசி விசாகத்தன்று பிறந்தவர் திருமுருகன். இவர் தனது ஆரம்பக் கல்வியை சுன்னாகம் இராமநாதன் கல்லூரியிலும், இடைநிலைக் கல்வியை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும் பயின்று, உயர் கல்வியை பேராதனை பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டு பட்டதாரியானார். மஹரகம தேசியகல்வி நிறுவகத்தில் பட்டப்படிப்பின் படிப்பை மேற்கொண்டார். 1989ஆம் ஆண்டில் சுன்னாகம் திருஞானசம்பந்தர் வித்தியாசாலையில் ஆசிரியராக நியமனம் பெற்றார். பின்னர் 1993ஆம் ஆண்டில் சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரிக்கு இடமாற்றம் பெற்று, பகுதித் தலைவராகவும், உப அதிபராகவும், பின்னர் பிரதி அதிபராகவும் பணியாற்றி 2008 மார்ச் மாதம் 16ஆம் திகதி முதல் அதே கல்லூரியின் அதிபராகப் பதவி உயர்வு பெற்றார். சமூகப்பணிகளை முன்னெடுத்து செல்வதை இலகுவாக்கும் நோக்குடன் அவர் தனது 50வது வயதில் அரச பதவிகளை ஓய்வுறுத்தி தனது சமய, சமூப்பணிகளை முழுநேரமாக ஆற்றிவருகிறார்.
இவரது ஆசிரிய சேவையைப் பாராட்டும் வகையில் 1991ஆம் ஆண்டு யாழ். மாவட்டக் கல்வித் திணைக்களமும், 2002ஆம் ஆண்டு வலிகாமம் கல்வி வலயமும் நல்லாசிரியர் விருதை வழங்கிக் கௌரவித்தது.

© 2023 Dr. Aaruthirumurugan