துர்க்காதேவி ஆலயத்தில் திருப்பணிகள்
- தனது 32 வயதில் துர்க்காதேவி தேவஸ்தான தலைவர் ஆன்மீகத்தாய் சிவத்தமிழ் செல்வி அம்மையார் அவர்களின் அன்புக்கட்டளையை ஏற்று சிவத்தமிழ் செல்வி அம்மையார் பிறந்த நாள் அறநிதியசபை உறுப்பினராக 1993ம் அண்டு சேர்ந்து கொண்டார்.
- தேவஸ்தான நிர்வாக சபையின் உறுப்பினராக 1995ஆம் ஆண்டு தெரிவு செய்யப்பட்டார்.
- 1999ஆம் ஆண்டு இலண்டனில் பல சிறப்புசொற்பொழிவுகளை நிகழ்த்தி கிடைத்த நிதியினை அம்மையாரிடம் கையளித்தார். இந்த பாராட்டுக்களை கௌரவிக்கும் முகமாக நிர்வாக சபையால் 14.11.1999 இல் பாராட்டு விழா நடாத்தப்பட்டு செஞ்சொற்செல்வரின் தாய் தந்தையர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.
- 32 வருடங்களுக்கு மேலாக தேவஸ்தான தலைவராக உன்னத பணியாற்றிய சிவத்தமிழ் செல்வி அம்மையாரின் இழப்புக்குப்பின் ஆறு.திருமுருகன் அவர்கள் தேவஸ்தான தலைவராக 29.06.2008 இல் நடைபெற்ற நிர்வாகசபைக் கூட்டத்தில் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்.
- ஆன்மீகத்தாயின் பெயரில் நவகோணவடிவில் நினைவாலயம் அமைக்கப்பட்டு ஒன்பது கலசங்கள் வைக்கப்பட்டு 07.01.2009இல் நடைபெற்ற அம்மையாரின் 84வது பிறந்தநாள் அறநிதிய விழாவில் திறந்து வைக்கப்பட்டது.
- தேவஸ்தான வடக்கு வீதியின் ஓரமாக புதிய பொங்கல் மண்டபம் திறந்து வைக்கப்பட்டது.
- சிவத்தமிழ்ச்செல்வி அம்மையார் தனது ஆரம்பக் கல்வியை கற்ற மல்லாகம் கனி~;ட வித்தியாலயம் அமைச்சின் அங்கீகாரத்துடன் யாஃகலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி கனிஸ்ட வித்தியாலயம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. மேலும் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று மாணவர்களுக்குப் பரிசில்கள் வழங்கும் வகையில் வங்கியில் ரூபா ஐந்து இலட்சம் நிபந்தனையுடன் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
- திருமஞ்சத் திருப்பணி நிறைவு பெற்று 2009 ஆம்ஆண்டு 6ஆம் திருவிழாவில் திருமஞ்சத்தில்
- அம்பாள் எழுந்தருளி அருள்புரிந்தார்.
- 29.08.2010இல் பாலஸ்தாபன கும்பாபிN~கம் நிறைவேறி புதுப்பொலிவுடன் 24.01.2011 இல் மகா கும்பாபிசேகம் சிறப்பாக நடைபெற்றது. மேலும் புதிய மணிக்கோபுரம் கட்டப்பட்டு லண்டனில் இருந்து கொண்டுவரப்பட்ட 1200 கிலோ எடையுள்ள பெரிய காண்டாமணி பொருத்தப்பட்டது.
- 2013 இல் 9ஆம் திருவிழாவின் போது புதிய கைலாசவாகனத்தில் அம்பாள் சிவலிங்க தரிசனக் காட்சியுடன் எழுந்தருளினார்.
- கும்பகோணத்திலிருந்து சமயக் குரவர்களின் ஐம்பொன் விக்கிரகங்கள் எடுத்து வரப்பட்டு உட்கோயிலில் சிற்பக்கலையுடன் கூடிய தனி ஆலயம் அமைக்கப்பட்டு 16.07.2014 இல் பிரதிஸ்டை செய்யப்பட்டு கும்பாபிசேகம் சிறப்பாக நிறைவேறியது. இதன் சகல செலவுகளையும் திருமுருகன் ஐயாவே ஏற்றார்.
- நல்லூர் ஸ்ரீதுர்க்காதேவி மணிமண்டபத்தில் மூன்று மாடிக்கட்டடம் 2014 இல் திறந்து வைக்கபபெற்றது.
- தேவஸ்தான தெற்கு வீதியில் பூங்கா அமைப்பதற்கான நிதியை கனடாவிலுள்ள தணிகாசலம் புவனேஸ்வரி குடும்பத்தினர் அன்பளிப்பாக வழங்கினர். 12.08.2014இல ;தணிகாசலம் பூங்கா திறந்து வைக்கப்பட்டது.
- இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் 30வது ஆண்டு விழாவில் சைவத்திற்கும், தமிழிற்கும், சமூகத்திற்கும் துர்க்காதேவி தேவஸ்தானம் ஆற்றிவரும் சேவைகளை பாராட்டிக் கௌரவிக்கும் வகையில் நாவலர் விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.
- தென்திசைக் கோபுர அத்திபாரம் 24.01.2016 தைப்பூசநாளில் நாட்டப்பெற்று 24அடி நீளமும்,
- 16அடி அகலமும், 61அடி உயரமானதும், 120அழகிய வர்ண சிற்பங்கள் கொண்டதுமான பஞ்சதளக் கோபுர கும்பாபிசேகம் 09.02.2017 இல் சிறப்பாக நிறைவேறியது.
- வடதிசைக் கோபுர அடிக்கல் 30.06.2017 ஆனி உத்தரத்தில் நாட்டப்பெற்று கோபுரகும்பாபிசேகம் 28.01.2018 இல் சிறப்பாக நிறைவேறியது. அத்துடன் தேவஸ்தான உட்கோயிலின் வடக்கு திருமஞ்சககிணற்றிற்கு சமீபமாக மேருசக்கர கோயிலின் கும்பாபிN~கமும் நிறைவேறியது. மேலும்
- வடதிசைக் கோபுரத்திற்கு முன்பாக நேரே மகாதனை ஒழுங்கையுடன் இணைக்கும் வகையில் பாதை ஒன்று திறக்கப்பட்டது.
- மேற்குதிசைக் கோபுர அடிக்கல் 30.03.2018 நாட்டப்பெற்று கோபுர கும்பாபிசேகம் 30.01.2019 இல் சிறப்பாக நிறைவேறியது.
- சுன்னாகத்தில் கட்டப்பட்ட மூன்றுமாடி மருத்துவ சேவைக்கட்டடம், திருமகள் புத்தகசாலை, திருமகள் அழுத்தகம் என்பன 14.09.2020 திறந்து வைக்கப்பட்டது.
- சிவத்தமிழ்ச் செல்வி அம்மையாரின் நினைவாக பன்னிரு திருமுறைகளுக்கு மதிப்புக் கொடுத்து அந்நூல்களை ஒவ்வொன்றாக பதிப்பித்து வெளியீடு செய்தார்.
- சமய நூல்கள் பதிப்பிற்காக வைத்திய கலாநிதி மனமோகன் அவர்கள் அன்பளிப்பு செய்த பணம் நிரந்தர வைப்பிலிடப்பட்டது.
- நான்கு திசையும் கோபுரம் கண்ட அம்பாளுக்கு தலைவாசல் கோபுரம் அமைக்கும் பணி இல்
- அத்திபாரம் இடப்பட்டு தற்போது நடைபெற்று வருகிறது.