அறப்பணிகளின் கருவூலம் சிவபூமி
- சிவபூமி அறக்கட்டளை 2004 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
- மன வளர்ச்சி குறைந்த பிள்ளைகளை ஆற்றுப்படுத்தவென 02.07.2004 இல் 12 பிள்ளைகளுடன் ஐயாவால் வைத்திய கலாநிதி குகதாசன் தம்பதிகளின் உறவினர்களான லீலாவதி சுப்பிரமணியம் குடும்பத்தினர் அன்பளிப்பாக வழங்கிய காணியில் கோண்டாவிலில் ஆரம்பிக்கப்பட்ட சிவபூமி சிறுவர் மனவிருத்திப்பாடசாலை இன்று 150 பிள்ளைகளை வழிப்படுத்துகிறது.
- அதேபோல் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்காக கிளிநொச்சியிலும் சிவாமி இராமதாஸர் அறக்கட்டளை நிறுவனத்தின் ஸ்தாபகர் திரு பொ.பரமலிங்கம் அவர்களின் நிதியுதவியில் கட்டப்பெற்று 26.05.2016 இல் மனவிருத்திப் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது.
- திருகோணமலையிலிருந்தும் கோண்டாவில் மனவிருத்திப்பாடசாலைக்கு பிள்ளைகளை சேர்க்கத் தொடங்கியதை பார்த்த திருமுருகன் ஐயா திருகோணமலையிலும் மனவிருத்திப்பாடசாலை ஒன்றை 14.07.2019 இல் தொடங்கினார். திருகோணமலை ஆலய அறங்காவலர் சபை அன்பளிப்பு செய்த நிலத்தில் தொடர் சொற்பொழிவுகளால் கிடைத்த நிதி ஊடாக திருமுருகன் ஐயா இந்த பணியை நிறைவேற்றினார். இரண்டு மாடிக் கட்டிடத்தில் மேலே யாத்திரிகர் விடுதியும் உள்ளது.
- 07.04.2007 இல் உதவி தேவைப்படும் முதியவர்களை பராமரிக்க சுழிபுரத்தில் திரு. பாலச்சந்திரனின் உதவியுடன் முதியோர் இல்லத்தை ஆரம்பித்தார். 11 முதியவர்களுடன் ஆரம்பமான இல்லம் இன்று 80 முதியவர்களை பராமரிக்கும் பெரும்பணியை சிறப்பாக செய்கிறது. பல அன்பர்கள் இதற்கு தொடர்ச்சியாக உதவி வருவது போற்றுதலுக்குரியது. இங்கே இறைபதமடையும் முதியவர்களுக்கான
- இறுதிக்கிரியைகளை திருமுருகன் ஐயாவே மகன் போல இருந்து ஆற்றுகிறார்.
- பன்னிரு அறைகளுடன் கீரிமலை நகுலேச்சரத்திற்கு பின்வீதியில் முதியோர் ஆச்சிரமம் ஒன்றை அமரர் கிரு~;ணபிள்ளையின் புத்திரர்கள் வழங்கிய கிரு~;ண பிள்ளை மடம் இருந்த இடத்தில் தற்போது நிர்மாணித்துக் கொண்டிருக்கிறார்.
- புனித பூமியாக மடங்களுடன் நிறைந்திருந்த கீரிமலை உள்நாட்டுப் போரால் மடங்கள் அற்றுக்காணப்பட்டதால் பல சைவ அன்பர்களின் வேண்டுதலுக்கு இணங்க 28.01.2010 இல் ஆசிரியர் விஸ்வநாதன் குடும்பத்தினர் வழங்கிய காணியில் சிவபூமி மடத்தை திறந்து வைத்தார்.
- சிவபூமி மடத்திற்கு அருகில் அகில இலங்கை இந்து மாமன்றத்தின் பேருதவியால் சிவபூமியாத்திரிகர் மடமும் சிவபூமி கலைக்களஞ்சியமும் உருவாக்கப்பட்டது. மேல்மாடிக்கட்டிட நிர்மாணத்திற்கு கைலாயப்பிள்ளை அபிராமி தம்பதிகள் நிதி உதவி செய்தார்கள்.
- 2013 ம் ஆண்டு தை 28 இல் குப்பிளானில் திரு.ஆ சிறீஸ்கந்தமூர்த்தி அன்பளிப்புசெய்த வீட்டுடன் கூடிய காணியில் சிவபூமி ஞான ஆச்சிரமத்தை திறந்தார். அன்னதானம், குருபூசைகள், அறநெறி வகுப்புகள் போன்ற பல சிவப்பணிகளோடு சிவனடியார்கள் தங்கி ஆறுதல் பெறவும், அறிவை வளர்க்க ஆன்மீகநூல் நிலையமும் இங்கு உள்ளது.
- சிவபூமி மனவிருத்தி பாடசாலைமாணவர்களின் சுயதிறன் விருத்திக்காக சிவபூமி தொழிற்பயிற்சிப் பாடசாலை ஒன்றை கோண்டாவிலில் கொழும்பு மனிதநேய அறநிதிய அமைப்பின் பேருதவியுடன் ஆரம்பித்தார். கற்பூரம், கடதாசிப்பை, காகித உறை, தாவர வளர்ப்பு, நெய் விளக்கு, கமுகு மட்டை கோப்பை கரண்டிகள் என பல பொருட்களின் உற்பத்திப்பயிற்சி இங்கு நடைபெற்று வருகிறது.
- அச்சுப் பதிப்பு மற்றும் புத்தகம் கட்டுதல் போன்ற பணிகளுக்காக சிவபூமி அச்சகத்தை ஆரம்பித்தார்.
- 2018 மார்ச் மாதத்தில் திருமுருகன் ஐயாவால் ஆரம்பிக்கப்பட்ட சிவபூமி பத்திரிக்கை நான்காவது ஆண்டில் பயணிக்கிறது. இதன் பிரதான ஆசிரியராக திருமுருகன் ஐயா செயற்படுகிறார்.
- சிவதட்சணா மூர்த்தி திருக்கோயில், கருங்கல் இரதம், கருங்கல்லில் செதுக்கப்பட்ட 658 திருவாசகப் பாடல்கள், பதினொரு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட சிவபுராணம், 108 சிவலிங்கங்கள், அகத்தியர் கோயில் மற்றும் கோசாலை என பக்தி மயம் கமழும் திருவாசக அரண்மனையை நாவற்குழியில் 24.06.2018 இல் அமைத்தார். வைத்தியர் மனமோகன் சிவகௌரி தம்பதிகள் வழங்கிய நிலம் மற்றும் நிதியினாலும், திருமதி கை. அபிராமி , திரு சு. பாலசிங்கம் போன்ற பல அன்பர்களின்
- நிதிப்பங்களிப்போடும் இந்த புனித காரியம் நிறைவேறியது.
- இம்மண்ணை ஆண்ட 23 மன்னர்களின் உருவச்சிலைகள், புராதன பொருட்கள், அரிய புகைப்படங்கள், ஓவியங்கள் சூரியக்குடும்ப கட்டுமானம் எனப் பலவற்றை கொண்ட பிரமாண்டமான அரும்பொருட்காட்சியகத்தை நாவற்குழியில் 25.01.2020 இல் அமைத்தார். திருமதி கைலாசபிள்ளை, வைத்தியர் க. பார்த்தீபன், திரு. நி. மகேசன், திரு. ரவீந்திரன், வைத்தியர் தேவகாந்தன், திரு.சி.சிவநாதன், திரு. விக்கினேஸ்வரன், திரு.சி. கருணாகரன், வைத்தியர் மனமோகன், இணுவில் திருவூர் ஒன்றியம், திரு.இ.தபோதரன், திருமதி.ஜெ. சுமித்திரா, திரு.என்.ஜெகன், திரு.சங்கர், திருமதி
- ஜெ.தேவமணி, திரு.க.பாலசுப்பிரமணியம், ரிச்மண்ட் ஆலய திருச்சபை, வரசித்தி விநாயகர் குடும்பம் (கனடா), சாயி இல்லம்(கனடா) என பல அன்பர்கள் நிதி வழங்கினார்கள்.
- தமிழ் மண்ணில் எல்லோருக்கும் மருத்துவ வசதிகள்
- கிடைப்பதை உறுதி செய்வதற்காக வைத்தியர் க.பார்த்தீபன் உதவியுடனும், வைத்தியர் த.சத்தியமூர்த்தியின் ஒத்துழைப்புடனும் அபயம் இலவச மருத்துவ சேவைகளை தொடங்கினார். ஆனைக்கோட்டையில் வைத்தியர் அ.பொன்னம்பலம் அன்பளிப்பு செய்த காணியில் 31.03.2019,ல் ஆரம்பிக்கப்பட்ட அபயம் இலவச மருத்துவ சேவை இயக்கச்சி (திலகவதி விஸ்வநாதன் குடும்பத்தினர் உதவி செய்தனர்.) மற்றும் ஆதிமயிலிட்டியில் (திரு சுகுமார் குடும்பத்தினர் உதவினார்கள்) ஆகிய இடங்களிலும் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
- தெருவில் அதிகரிக்கும் கட்டாக்காலி நாய்களால் மக்களுக்கும் நாய்களுக்கும் பாரிய இடர்பாடுகள் ஏற்படுவதைக் கண்ட திருமுருகன் ஐயா 12.04.2019 இல் சிவபூமி நாய்கள் சரணாலயத்தை இயக்கச்சியில் செல்வி ரோகிணி பேராயிரவர் அன்பளிப்பு செய்த நிலத்தில் ஆரம்பித்தார். வைரவர்
- ஆலயமும் இங்குள்ளது.
- எதிர்கால சிவபூமியின் அறப்பணிகளுக்கு உறுதுணையாக இருக்கவென சிவபூமி விவசாயப்பண்ணைகளை சுழிபுரம் (ரி~p தொண்டுநாத சுவாமிகள் உதவினார்) , இயக்கச்சி (கோயில்வயல், கொற்றாண்டர் குளம், அன்னபூரணி வயல்), நாவற்குழி (அகத்தியர் மூலிகைத் தோட்டம், செவ்விளநீர் தோட்டம்) போன்ற இடங்களில் உருவாக்கினார்.
- பசுவதைகளை தடுத்து அவற்றை காப்பதற்காக கீரிமலை, சுழிபுரம், நாவற்குழி ஆகிய இடங்களில் கோசாலைகளை உருவாக்கினார்.
- தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலை நோயாளர்களுக்கு செவ்விளநீர், குடிநீர் என்பவற்றை வழங்க மருத்துவ நிதியம் ஒன்றை உருவாக்கினார்.
- நாவற்குழியில் மக்களால் ஐயனார் ஆலயம் ஒன்று பராமரிப்பதற்காக
இவராது அறப்பணிகளில் சில
- சுன்னாகம் திருஞானசம்பந்தர் வித்தியாசாலையில் ஆறு திருமுருகன் அறக்கொடை நிதியம் ஆரம்பித்து வறிய பிள்ளைகளுக்கு உதவுதல்.
- கொழும்பு பழைய மாணவர் சங்கம் மூலம் கிடைத்த நிதியில் ஸ்கந்தன் கோவில் திருப்பணி நிறைவேற்றியமை, ஸ்தாபகர் கந்தையா உபாத்தியாயரின் உருவச் சிலை நிறுவியமை.
- இலண்டன் அனாதைகள் அறக்கட்டளை உதவியுடன் கண்பார்வையற்ற சிறுவர்களுக்கு 16 லட்சம் ரூபாய் செலவில் உடுவிலில் நிரந்தர இருப்பிடம் உருவாக்கிக் கொடுத்தமை.
- இலண்டன் சிவயோகம் அறக்கட்டளை உதவியுடன் யாழ் போதனா வைத்தியசாலையின் 15 லட்சம் ரூபாய் செலவில் நவீன கண் சத்திர சிகிச்சை நிலையம் உருவாக்கியமை, 18 லட்சம் ரூபாய் செலவில் நவீன லேசர் இயந்திரம் வழங்கியமை.
- 15 லட்சம் ரூபாய் செலவில் கணவனை இழந்த இளம் விதவைகளுக்குப் புதிய வீடுகளை அமைத்து ழூசிவயோகம் அன்னையர் குடியிருப்பு என்ற மாதிரிக் கிராமத்தை உருவாக்கியமை.
- யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, வன்னி ஆகிய இடங்களில் உள்ள சைவ சிறுவர் இல்லங்களுக்கு இலண்டன் கனகதுர்க்கை அம்மன் ஆலய உதவியுடன் வருடா வருடம் நிதி கிடைக்க ஏற்பாடு செய்துள்ளமை.
- யாழ்ப்பாணத்தில் உருவாக்கப்பட்ட புற்றுநோயாளர் கருணை நிதியம் மூலம் சுமார் 13 லட்சம் ரூபா வரை புற்று நோயாளர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்தமை.
- இந்து சமய மறுமலர்ச்சிக்கு வித்திட்ட ஆறுமுகநாவலரின் சிலையினை தன் சொந்தச் செலவில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் ஸ்தாபித்தமை.
- திருகோணமலை அலஸ்தோட்டத்தில் வாழும்1200 அகதிக் குடும்பங்களின் வழிபாட்டுக்கான ஆனந்த விநாயகர் ஆலயம் ஸ்தாபித்தமை.
- 1995இல் இடப் பெயர்வுடன் கிளிநொச்சியில் குடியேறிய மக்களுக்காக 20க்கும் மேற்பட்ட நாகதம்பிரான் விக்கிரகங்களை பிரதி~;டை செய்தமை.
- யாழ்ப்பாணம் சப்ரகமுவ ரஜரட்டைப் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் வசதி குறைந்த மாணவர்களின் கல்விக்கு உதவி பெற்று கொடுத்தமை.
- யாழ் போதனா வைத்தியசாலை நூல் நிலையத்திற்கு விலைமதிப்பற்ற நூல்களைப் பெற்றுக் கொடுத்தமை.
- மகாவித்துவான் பிரம்மஸ்ரீ வீரமணி ஐயரின் பாதிப்புக்கு உள்ளாகாத நூல்கள் சிலவற்றைப் பதிப்பித்து வெளியிட்டமை.
- கொக்குவில் மஞ்சவனப்பதி ஆலயத்தில் நடைபெற்ற தொடர் சொற்பொழிவுக்கு வழங்கப்பட்ட அன்பளிப்பு மூலம் விதவைகளுக்கு தையல் இயந்திரம் வழங்கியமை.
- இணுவில் கிராமத்தில் மத்திய அறிவாலயம் அமைக்க கனடா, இலண்டன் நாடுகளில் இணுவில் வாழ் மக்கள் உதவி பெற்றுக் கொண்டமை.
- இந்துக்கள் கண்தான சபையை உருவாக்கியமை.
- செவிப்புலன் குறைந்த மாணவர்களுக்கு அவுஸ்திரேலிய மருத்துவ உதவி பெற்று அக்குறை நீக்கும் கருவிகள் பெற்றுக்கொடுத்தமை.
- அரியாலையில் யுத்த அனர்த்தால் அழிந்து போன தென்னை மர மீள் நடுகைக்காக 600 தென்னங்கன்றுகளை தனது லண்டன் சொற்பொழிவு மூலம் கிடைத்த பணத்தில் இருந்து பெற்றுக் கொடுத்தமை.
- யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவர் வழிபாட்டிற்காக வித்தக விநாயகர் ஆலயம் அமைப்பதற்கு இலண்டன் சிவயோகம் அறக்கட்டளை நிதியத்திலிருந்து நிதி பெற்று வழங்கியமை.
- யாழ் போதனா வைத்தியசாலை சிறுநீரக நோயில் பிரிவிற்கு 18 லட்சம் செலவில் இரத்த சுத்திகரிப்பு இயந்திரத்தை பிரித்தானிய இந்துக் கோவில்களின் உதவியுடன் வழங்கியமை.
- திருநெல்வேலி சைவ வித்தியா விருத்திச் சங்கத்தின் கிளை நிறுவனத்தை இணுவிலில்
- ஆரம்பிப்பதற்கு காணி கொள்வனவு செய்ய நிதி வழங்கியமை.
- தனது ஆசான் இ.மகாதேவா (தேவன் யாழ்ப்பாணம்) அவர்களது சிறுகதைத் தொகுதியை யாழ் இலக்கிய வட்டத்தின் ஊடாக வெளியிட நிதி வழங்கியமை.
- உடுவில் சபாபதிப்பிள்ளை வீதியில் இலண்டன் புற்றுநோய் உதவி நிறுவனத்தின் ஊடாக புற்றுநோய் காப்பகம் அமைக்கும் பணியைத் தொடங்கியமை.
- போதனா வைத்தியசாலை சத்திர சிகிச்சை பிரிவு மாணவர்களுக்கு போட்டோ பிரதி இயந்திரம் ஒன்றை இலண்டன் அன்பர் ஒருவர் மூலம் பெற்று கொடுத்தமை.
- யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர் சங்கத்திற்கு மருத்துவ நூல்கள், உபகரணங்கள் அன்பளிப்பு செய்தமை.
- யாழ் மருத்துவபீட மாணவர்களின் ‘அரும்புகள்” சிறுவர் இருதய நோய் சிகிச்சை நிலையத்திற்க 50,000 ரூபா வழங்கியமை.